நோக்கம்
நம் நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் செய்த MEP குருக்கள், கல்வியறிவு பெறுவதில் சமூக சிக்கல் நீடிப்பதையும் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்படவில்லை என்பதையும் உணர்ந்து ஏழை எளிய மக்கள் பயனுற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தொடங்கப்பட்டது இப்பள்ளி.
குறிப்பாக விவசாய குடிகளாகிய இப்பகுதி மக்கள் கல்வி பெற வேண்டும் என்பதே முதன்மை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது
கல்வியும், ஒழுக்கமும் இரு கண்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
களம் மாற,மாற காட்சியும் மாறும்” என்பதைப் போல தற்போதைய போட்டி நிறை கார்பரேட் கல்வி நிறுவனங்களுக்கும் கடும் போட்டியை தந்து கொண்டிருக்கிறது
குறிக்கோள்
சுய சார்புள்ள, வலிமையான, வளமான படைப்பாற்றல் உள்ள மாணவ மாணவிகளை உருவாக்குதல் என்பதே நம் பள்ளியின் குறிக்கோளாகும்.
சமூகத்திற்கு பலனளிக்கும் மாணவர்களை உருவாக்குவதும் இப்பள்ளியின் ஒரு முக்கிய குறிக்கோளாகும். சிறப்பு குறிக்கோளாக மெல்ல கற்கும் மாணவர்களுக்கு எடுக்கப்படும் முயற்சியை குறிப்பிடலாம்.
அறிவைப் பெருக்கி, ஆற்றலை வளர்த்து சாதனை படைக்கும் மாணவர்களை உருவாக்குவது.