நிறுவனர்
பாண்டி- கடலூர் மறை மாவட்டத்தின் ஒரு அங்கமான இப்பள்ளி அதன் ஆயர்அவர்களால் நடத்தப்படுகிறது சுமார் 200 தொடக்கப் பள்ளிகளும் 18 உயர்நிலைப் பள்ளிகளும் 10 மேல்நிலைப் பள்ளிகளையும் நிர்வகிக்கும் நிர்வாகி ஆயரே ஆவார்.
அவர் நிர்வாக வசதிக்காக , கல்வி பணிக்கென அருட்தந்தையர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தாளாளர்களாக / தலைமை ஆசிரியராக நியமிக்கிறார்.
ஆயரின் ஆணைக்கிணங்க அவர்களே தன்னதிகாரம் பெற்று அந்தந்த பள்ளிகளை நிர்வாகம் செய்து வருகின்றனர்
நிர்வாகம்
சிறுபான்மையினருக்கான ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் தாளாளரே இப்பள்ளியின் முழு நிர்வாக அதிகாரியாவார்.
அவருக்கு உதவியாக பல்வேறு குருக்களை நியமித்து அவர் நிர்வாகம் செய்கிறார்.
கல்வி மட்டுமில்லாது, பல்வேறு திறன்களை வளர்க்கும் நோக்கில் ,விளையாட்டு , கலாச்சாரம் ,விழாக்கள் தற்கால தற்காப்பு, கலை இசை ஆங்கிலம் பேச என பல்துறை விற்பன்னர்களைக் கொண்டு பள்ளியை இயக்க இயக்குகிறார்.
இதன் விளைவாக அனைவரும் இணைந்து ஒரு குழுவாக செயல்பட்டு 80 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு இப்பள்ளி நிர்வாகம் செய்யப்படுகிறது.