அமைவிடம்

இந்திய விடுதலைக்கு முன்பே அதாவது சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட பகுதியின் அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் என்ற பகுதியில் அமைந்தது, தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது மேல்நாரியப்பனூர் என்பது இக்கிராமத்தின் பெயராகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் கிழக்கே சின்னசேலம் மேற்கே தலைவாசல் வடக்கே கல்வராயன் குன்றுகள். தெற்கே சென்னை -சேலம் நெடுஞ்சாலைக்கு அருகேயும் அமைந்துள்ள அழகான மற்றும் அமைதியான பகுதி மேலும் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.