புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி ஆனது ஒரு சிறு விதையாக 1942 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக அருட்திரு தந்தை .அவர்களால் உருவாக்கப்பட்டது. அப்போதைய தேவை மக்களுக்கு விழிப்புணர்வும் கல்வியறிவும், மருத்துவமும் மிக அவசியம் என்றுணர்ந்த குருக்களால் உருவானது இப்பள்ளி.

தொடக்கப்பள்ளியாக செயல்பட தொடக்கத்திலிருந்து மேல்நாரியப்பனூரை மையமாகக் கொண்டு சுமார் 10 கி.மீ சுற்று வட்டாரங்களிலிருந்து மாணவர்கள் படிக்கத் தொடங்கினர்

1967 வரை தொடக்கப் பள்ளியாக இருந்தவரும் பள்ளி 1968 ஆம் ஆண்டு அருட்தந்தை பால்தெலாமூர் அவர்களின் பெரும் முயற்சியால் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது ஆனால் அதுவரை வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் நடுநிலை கல்வியை இங்கேயே தொடர வழி வகுத்தது.

பின்னர் 1983 ஆம் ஆண்டு அருட்தந்தை. M.லூர்து சாமி அவர்களால் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது SSLC இன்று அறியப்பட்ட உயர்நிலைக் கல்வியே ஒரு சிறிய கிராமத்திலா? என்று பலராலும் வியந்து பாராட்ட பெற்றது.

அருட்தந்தை G.பீட்டர் ராஜேந்திரன் அவர்களின் சீரிய முயற்சியாலும் உயர்மறை மாவட்டமான பாண்டி- கடலூர் மறை மாவட்ட அவர்களின் ஊக்கத்தினாலும் 1995-ல் புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி எனும் புதிய பரிமாணத்தை நம் பள்ளி பெற்றது

அன்றிலிருந்து இன்று வரை, பல உயர் அதிகாரிகளையும் சமூகத்திற்கு பல்லாயிரக்கணக்கான பண்பாளர்களையும் வழங்கி வருகிறது.