பள்ளியின் விதிமுறைகள்

  1. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் காலை 08:00 மணிக்குள் பள்ளிக்கு வருகை தரவேண்டும் மற்றும் மாணவர்கள் காலை எட்டு முப்பது மணிக்குள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் கலந்து கொள்வது மாணவர்களின் இன்றியமையாத கடமையாகும்

  2. காலதாமதமாக வரும் மாணவர்கள் காலதாமத அட்டவணையில் தலைமை ஆசிரியரின் கையொப்பம் பெற்ற பின்னரே வகுப்புக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்

  3. விடுப்பு தேவைப்படின் விடுப்பு விண்ணப்பத்தில் பெற்றோர் கையொப்பத்துடன் தலைமை ஆசிரியரின் அமைதியை அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்

  4. மாணவ மாணவியர் எல்லா பள்ளி நாட்களிலும் முழுமையான பள்ளி சீருடை உடன் பள்ளிக்கு வர வேண்டும் முழுமையான பள்ளி சீருடை இன்றி மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மாணவர்கள் சீருடை பள்ளியில் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்

  5. கீழ்படியாமை பள்ளியின் நிர்வாகி மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களிடம் மரியாதை குறைவு ஒழுக்கத்திற்கு மாறான நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் பள்ளியில் விளக்கப்படுவர்

  6. வகுப்பறையை தூய்மையாக வைத்துக் கொள்வதும் வகுப்பறையில் உள்ள பொருள்களுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்.

  7. பெற்றோர்கள் பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் பள்ளியுடன் ஒத்துழைப்பதும் தங்கள் பிள்ளைகளின் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்காணிப்பதும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கட்டாயமாக கலந்து கொள்வதும் பெற்றோரின் கடமை பெற்றோர் கூட்டம் நடைபெறும் நாள் என்று பெற்றோர்கள் நேரில் வந்து மாணவருடைய தேர்ச்சி அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும்

  8. பள்ளி நேரத்தில் மாணவர்கள் பெற்றோரையோ, உறவினரையோ தலைமை ஆசிரியரின் அனுமதி பெற்ற பின் தான் சந்திக்க வேண்டும்.

  9. விலைமதிப்புள்ள அணிகலன்களை பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது மாணவர்கள் தங்கள் பொருட்களையும் பணத்தையோ தொலைத்து விட்டால் பள்ளி நிர்வாகம் பொறுப்பல்ல

  10. ஒவ்வொரு மாணவரும் பள்ளியின் கட்டுப்பாட்டையும் பள்ளியின் நற்பெயரையும் பாதுகாத்தல் வேண்டும் பள்ளி உடமைகள் மற்றும் ஆய்வக உபகரணங்கள் மாணவரால் சேதம் ஏற்படின் குறிப்பிட்ட மாணவர்களிடமிருந்து அதற்கான சேத கட்டணம் வசூலிக்கப்படும்

  11. இடைத்தேர்வு , காலாண்டு தேர்வு அரையாண்டு தேர்வு ஆகிய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முன்னேற்ற அறிக்கையில் எழுதப்படும் இதில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும்

  12. வருகைப்பதிவு 80 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

  13. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்

  14. மற்ற வகுப்புகளுக்கு நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

  15. பள்ளி வளாகத்தில் பசுமை தரும் மரம் செடி கொடிகளை பாதுகாப்பது மாணவர்களின் கடமை அவைகளுக்கு மாணவர்கள் எவ்விதத்திலும் தீங்கிழைத்தல் கூடாது

  16. பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் ஒழுங்கீனமாக புத்தகங்கள் குறுந்தகடுகள் கைப்பேசிகள் மற்றும் பட கருவிகள் போன்றவற்றை எடுத்து வருவதும் பள்ளி தேர்வுகளில் போது காப்பி அடித்தால் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவதும் மன்னிக்க முடியாத ஒன்றாகும் அவ்வாறான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் பள்ளியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள்

மேற்கண்ட அனைத்து விதிமுறைகளையும் நான் பின்பற்றுகிறேன் இந்த விதிமுறைகளுக்கு மாறாக நடக்கும் பட்சத்தில் பள்ளி நிர்வாகம் எடுக்கும் அனைத்து விதமான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன் என்று இதன் மூலம் உறுதியளிக்கிறேன் இவை அனைத்திற்கும் பெற்றோராகிய நானும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்